முதல்முறை வாக்காளர்களுக்கு குட் நியூஸ்... ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி சலுகை.!
Air India express offers first time voters
18-வது மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்களாக வாக்களிக்க உள்ளனர்.
இதனால் ஓட்டு போட செல்லும் முதல் முறை வாக்காளர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் கட்டணச் சலுகை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் வாக்களிக்க விமானத்தில் செல்லும் 18 முதல் 22 வயது உட்பட்ட முதல் முறை வாக்காளர்களுக்கு உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களில் 19% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த சலுகை வருகின்ற ஜூன் 1ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Air India express offers first time voters