ஒரே நாளில் பல்வேறு காரணங்கள்: ஏர் இந்தியாவின் 06 சர்வதேச விமான சேவைகள் ரத்து: பயணிகளுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


கடந்த 12-ஆம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மருத்துவ விடுதி ஒன்றின் மீது விழுந்து வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 241 பேர் உடல் கருகி சிதைந்து பலியானதோடு, தரையில் இருந்த 33 பேர் பரிதாபமாக பலியானார்கள். குறித்த விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக 11a இருக்கையில் அமர்ந்திருந்தவர் மாத்திரம் உயிர் தப்பியுள்ளார். 

நாட்டையே உலுக்கியுள்ள இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து, வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளளனர். கேதார்நாத்திலிருந்து இமயமலை மலைகளில் உள்ள பிரபலமான இந்து யாத்திரைப் பாதையில் பறந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.

இந்நிலையில், பல்வேறு காரணங்களால் இன்று ஒரே நாளில் மட்டும், ஏர் இந்தியாவின் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களின் 06 சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், டெல்லி – துபாய், டெல்லி – வியன்னா, டெல்லி – பாரீஸ், அகமதாபாத்-லண்டன், பெங்களூரு – லண்டன், லண்டன் – அமிர்தரசஸ் ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு முதல் முறையாக அகமதாபாத்-லண்டன் சேவையை அறிவித்த நிலையில் அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் குறிப்பிடுகையில், விமான பயணிகளுக்கு ஓட்டல் வசதியை வழங்கியிருக்கிறோம். பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், முழு கட்டண தொகையையும் திருப்பி தரவோ அல்லது பயணிகள் விரும்பினால், மீண்டும் விமான பயணம் மேற்கொள்ள வசதி ஏற்படுத்தவோ தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Air India cancels 6 international flights on a single day due to various reasons


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->