132 ஆண்டுகளுக்கு பின் அசாமில் வரலாறு காணாத மழை: 04 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு..! - Seithipunal
Seithipunal


மே 29-ஆம் தேதி முதல் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கனமழை கொபெய்து வருகிறது. குறித்த மழையின் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.  அதன்படி, அசாம் மாநிலத்தில் வரலாறு காணாத மழையால் 04 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 19 மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 04 லட்சம் பேரை கனமழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் பாதித்துள்ளதாகவும், அதிகபட்சமாக கச்சார் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்தில் மட்டும்  சுமார் 1.03 லட்சம் மக்கள் மழை, வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனதாகவும், கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு காணப்படுவதால் அரசின் உதவிகள், பாதிக்கப்பட்ட மக்களை சென்று சேருவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.

அத்துடன், அசாம் மாநிலத்திலேயே பெரிய நகரமான சில்ச்சார் நகரத்தில் 24 மணி நேரத்தில் 415.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 1893-ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் அங்கு ஒரே நாளில் அதிக மழை பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 132 ஆண்டுகள் கழித்து இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளதாக அசாம் செய்திகள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

After 132 years 4 lakh people are stranded in floods due to unprecedented rains in Assam


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->