வரதட்சணை மரணம் வழக்கில் அதிரடி...! உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்த உச்சநீதிமன்றம்...! - ‘இது மனித உரிமை மீறல்’ என கடும் கண்டனம்
Action dowry death case Supreme Court cancels bail granted by High Court Strong condemnation This violation human rights
வரதட்சணை மரணம் தொடர்பான அதிர்ச்சிகரமான வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு பாட்னா நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய கோரி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினர். இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு தீவிரமாக விசாரித்தது.

இதன் விசாரணையின் முடிவில், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அந்த நபருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்த நீதிபதிகள், அவர் உடனடியாக காவலர்கள் முன்னிலையில் சரண் அடைய வேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், நீதிபதிகள் தங்களது உத்தரவில் வலியுறுத்தியதாவது," வரதட்சணை மரணம் போன்ற மிகக் கடுமையான குற்ற வழக்குகளில், உயர்நீதிமன்றங்கள் தங்களது விருப்புரிமையை பயன்படுத்தும் போது மிகுந்த பொறுப்புணர்வும், எச்சரிக்கையும் அவசியம்.
இத்தகைய சம்பவங்கள் வெறும் குற்றமாக மட்டும் இல்லாமல், மனித உரிமைகளுக்கும், பெண்களின் கண்ணியத்திற்கும் எதிரான கொடூரமான மீறலாகும்.
மேலும், சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும், வரதட்சணை என்ற சமூகப் பழக்கம் இன்னும் பல பெண்களின் உயிரை பறித்து வருகிறது.
மணமகன் தரப்பின் பேராசை பணம், நகை, சொத்து போன்ற கோரிக்கைகள் பல நேரங்களில் பெண்களை கொலை செய்யவோ அல்லது தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளவோ காரணமாகிறது.இந்த வரதட்சணை மரணங்கள், நவீன சமுதாயத்தின் முகத்தில் பதிந்துள்ள அழியாத களங்கம் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
Action dowry death case Supreme Court cancels bail granted by High Court Strong condemnation This violation human rights