காற்றழுத்த தாழ்வு பாதை தாக்கம்! இன்று மழை...நாளை கனமழை...! - வானிலை மையம்
Low pressure area affecting Rain today heavy rain tomorrow Meteorological Department
சென்னை வானிலை மையத்தின் புதிய முன்னறிவிப்பின்படி, சுமார் 0.9 கிமீ உயரத்தில் உள்ள மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுவதாக தெரிவித்துள்ளது.
இதனால் இன்று (05-04-2026) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னல் தோன்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.

கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு ,நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
நாளை (06-04-2026) தென்தமிழகத்தின் பல பகுதிகளில் இடி மின்னல் உடன் மிதமான மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில்,புதுவை, வடதமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
மேலும் மதுரை,விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் அதிகம்.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 36–37 டிகிரி செல்சியஸை தொட்டிருக்கலாம், குறைந்தபட்ச வெப்பநிலை 26–27 டிகிரி செல்சியஸை தொட்டிருக்க வாய்ப்பு உள்ளது.மேற்கண்ட தகவல்களை அதிகாரப்பூர்வமாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
English Summary
Low pressure area affecting Rain today heavy rain tomorrow Meteorological Department