குன்னூர் சாலையில் பரபரப்பு! தவெக ஆதரவாளர்கள் பயணித்த வேன் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்து...! - 21 பேர் காயம்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக நாமக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் தங்கராஜ் அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், அவருக்கு ஆதரவாக நாமக்கல்லில் இருந்து தேர்தல் பிரசாரம் செய்ய உற்சாகமாக கிளம்பிய ஆதரவாளர்கள், வேனில் குன்னூரை நோக்கி பயணம் மேற்கொண்டனர். வழியில், சென்னையைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகள் 7 பேர் ‘லிப்ட்’ கேட்டதால், அவர்களையும் வேனில் ஏற்றிக் கொண்டு பயணம் தொடரப்பட்டது.

கரும்பாலம் அருகே வேன் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த சுமார் 30 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த எதிர்பாராத விபத்தால் வேனில் இருந்தவர்கள் அலறியடித்து உதவி கோரினர்.அதை கவனித்த வழிப்போக்கர்கள் உடனடியாக காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் டிரைவர், கிளீனர் உள்ளிட்ட மொத்தம் 21 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கேத்தி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திடீர் விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Confusion Coonoor Road van carrying Tvk supporters overturned 30 foot gorge causing major accident 21 people injured


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->