எச். ராஜாவுக்கு ஆளுநர் பதவி? மோடி சந்திப்பின் பின்னணி என்ன? பாஜக மேலிடம் எடுத்த முடிவு! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
H Raja to be appointed as Governor What is the background of Modi meeting BJP top brass decision
தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சென்னை வந்தபோது பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது எச். ராஜாவை தனியாக சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரைக்குடி தொகுதியில் போட்டியிட விரும்பிய எச். ராஜா, உடல்நலக் காரணங்களால் இந்த முறை தேர்தலில் இருந்து விலகியுள்ளார். அண்மையில் ஒரு டிவி விவாத நிகழ்ச்சியில் மயங்கி விழுந்ததையடுத்து, அவரது உடல்நிலை குறித்து கவலை எழுந்தது. பின்னர் மருத்துவ சிகிச்சை பெற்ற அவர், அரசியல் நடவடிக்கைகளையும் குறைத்திருந்தார்.
இந்த சூழலில், பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு, எதிர்காலத்தில் அவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்படும் என்ற தகவலையும் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.
ஏற்கனவே தமிழக பாஜகவில் இருந்து இல. கணேசன், தமிழிசை சவுந்தரராஜன், சி.பி. ராதாகிருஷ்ணன் போன்றோர் ஆளுநர்களாக பதவி வகித்துள்ள நிலையில், தற்போது எச். ராஜாவுக்கும் அதே வாய்ப்பு வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
இருப்பினும், இதுவரை இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாததால், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாத அரசியல் தகவலாகவே பார்க்கப்படுகிறது.
English Summary
H Raja to be appointed as Governor What is the background of Modi meeting BJP top brass decision