இந்தியா - பனாமா கால்பந்து போட்டி 1-1 என்ற கணக்கில் டிரா..! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் பனாமா அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்திய அணி முதல் பாதியின் 41-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது.

இந்திய வீரர் ரியல் வில்லியம்ஸ், ஆகாஷ் மிஸ்ரா கொடுத்த பாஸை பயன்படுத்தி பந்தை வலைக்குள் செலுத்தி அந்த கோலை பதிவு செய்தார். இதன் மூலம் ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஃபிபா தரவரிசையில் இந்திய அணி 138-வது இடத்திலும், பனாமா அணி 44-வது இடத்திலும் உள்ளன. ஆனாலும், இந்த ஆட்டத்தில் இந்திய அணி, பனாமாவை வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 68-வது நிமிடத்தில் பதில் பனாமா அணி கோலை பதிவு செய்தது. அந்த அணியின் வாலென்சியா அந்த கோலை பதிவு செய்தார்.

இறுதியில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இந்திய அணி அடுத்ததாக பிரேசில் மற்றும் உருகுவே கால்பந்து அணிகளுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India vs Panama football match ends in a 1 to1 draw


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->