டிஜிட்டல் உலகிலும் விஜய் முன்னிலை...! - உறுதிமொழி பத்திரம் 3.20 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்து சாதனை...!
Vijay leads digital world too 3point20 lakh people downloaded affidavit setting record
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள உறுதிமொழி (அஃபிடவிட்) பத்திரங்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் சொத்து விவரங்கள், பின்னணி தகவல்கள் குறித்து அறிந்து கொள்ள லட்சக்கணக்கானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்திய தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://affidavit.cci.gov.in/ தளத்தில் அனைத்து வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதில், வேட்பாளர்களின் சொத்து விவரங்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்கள் வெளிப்படையாக இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் முதன்முறையாக அரசியல் களத்தில் குதித்துள்ள விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அவரின் பிரமாண பத்திரம் மட்டும் இணையதளத்தில் இருந்து சுமார் 3.20 லட்சம் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு சாதனை அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
அவருக்கு அடுத்தபடியாக, மு.க. ஸ்டாலினின் பிரமாண பத்திரத்தையும் சுமார் 1.30 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த தகவல்கள் தேர்தல் களத்தில் வேட்பாளர்களின் மீதான மக்கள் ஆர்வம் எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை தெளிவாக வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Vijay leads digital world too 3point20 lakh people downloaded affidavit setting record