ஒருதலைக்காதலால் நடந்த விபரீதம்; கணவரை இழந்த இளம்பெண்..நடந்தது என்ன?
A tragedy caused by unrequited love what happened to the young woman who lost her husband?
ஒருதலைக்காதலால் இளம பெண்ணின் கணவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மராட்டிய மாநிலம் நவி மும்பை மாவட்டம் வைஷி பகுதியை சேர்ந்த தம்பதி அபுபக்கர் மண்டல் மற்றும் அவரது மனைவி பாத்திமா,இவர்களுக்கு திருமணம் முடிந்து சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.இவர்களுக்கு நடுவில் பெரிய தலைவலியாக ஒரு வாலிபர் இருத்துவந்துள்ளார்.அந்த வாலிபரின் பெயர் அதே பகுதியை சேர்ந்த அமீனுர் அலி,
21 வயதான இவன் சந்தோசமாக இருந்த குடும்பத்தை நாசம் செய்தவன், இவன் அபுபக்கர் மண்டல் மனைவி பாத்திமாவை ஒருதலையாக காதலித்துள்ளார். அபுபக்கரை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பாத்திமாவிடம் அமீனுர் அலி வற்புறுத்தியுள்ளார். இதற்கு பாத்திமா மறுப்பு தெரிவித்துள்ளார்.ஆனால் அந்த படுபாவி வாலிபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து கணவனை கொல்ல துணிந்து விட்டான்.
பாத்திமாவை திருமணம் செய்ய எண்ணிய அமீனுர் அலி சம்பவத்தன்று இதற்காக கடந்த 21ம் தேதி இரவு வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த கணவர் அபுபக்கரை இடைமறித்த அமீனுர் அலி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்கினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அபுபக்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அவரின் உடலை ஆள்நடமாட்டமற்ற பகுதியில் வீசிய அமீனுர் அலி யாருக்கும் தெரியாமல் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் வேலைக்கு சென்ற கணவர் வீடு திரும்பாதது குறித்து கவலையடைந்த பாத்திமா போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை செய்யப்பட அபுபக்கரின் உடலை மீட்டனர். இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், ஒருதலைக்காதலால் அபுபக்கரை கொலை செய்த அமீனுர் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
A tragedy caused by unrequited love what happened to the young woman who lost her husband?