பெங்களூருவில் பயங்கரம்: மகள் கண்முன்னே மனைவியை குத்தி கொன்ற கணவனின் வெறிச்செயல்..! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் சென்னநாராய பட்டணாவை சேர்ந்தவர் ரேகா.  கருத்து வேறுபாடு காரணமாக ரேகா கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இதே நேரத்தில் துமகுரு மாவட்டத்தில் உள்ள சிராவை சேர்ந்தவர் லோஹித்ஷ்வா. அவருக்கு 43 வயதான இவரும் மனைவியை பிரிந்து இருப்பவர். ரேகா மற்றும் லோஹித்ஷ்வா இருவரும் ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். 

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு பெங்களூருக்கு குடியேறியுள்ளனர். ரேகா மாகடி சாலையின் அருகே உள்ள ஒரு கால் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே  அலுவலகத்தில் தனது பரிந்துரையின் பெயரில் தனது கணவருக்கும் கார் ஓட்டுநர் வேலையை வாங்கிக்கொடுத்துள்ளார்.

இருவரும் காதலித்தாலும் திருமணம் செய்துகொண்டிருந்தாலும் லோஹித்ஷ்வாவுக்கு ரேகாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதாவது  அவருக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக நினைத்து அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று காலை ரேகாவும் அவரது மகளும் சாலையை கடக்க பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த லோஹித்ஷ்வா ரேகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவரும் மாறிமாறி கடுமையாக பேச பொறுமையை இழந்த லோஹித்ஷ்வா மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்முடிதனமாக ரேகாவை குத்தியுள்ளார். 

அருகில் இருந்த ரேகாவின் மகள் அதனை தடுக்க முயன்றுள்ளார். ஆனால், முடியவில்லை. அப்போது அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் லோஹித்ஷ்வா அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளார். கத்தி குத்துக்கு ஆளாகி ரத்தவெள்ளத்தில் சரிந்த ரேகா அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். மருத்துவ பரிசோதனையில், அவரது உடலில் குறைந்தது 11 முறை கத்தியால் குத்தப்படத்திற்கான காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் போலீசார் லோஹித்ஷ்வா கைது செய்து விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கத்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A husband stabbed his wife to death in front of his daughter in Bengaluru


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->