பரோடா மகாராணிக்கு நேரு ஆர்டர் செய்த ‘ரோல்ஸ் ராய்ஸ்’ கார்: சத்ரபதி சிவாஜியின் வம்சாவளி பெண் விவாகரத்து: காரணம் என்ன..?
A descendant of Chhatrapati Shivaji Maharaj gets divorced over a Rolls Royce ordered by Nehru for the Maharani of Baroda
மத்தியபிரதேசத்தில் குவாலியரை சேர்ந்த பெண்ணுக்கும், ராணுவ அதிகாரிகள் குடும்பத்தை சேர்ந்த வாலிபருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. குறித்த பெண், சத்ரபதி சிவாஜியின் கடற்படை தளபதியாக இருந்தவரின் வம்சாவளியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 1951-ஆம் ஆண்டு், பரோடா மகாராணி சிம்னா பாய் சாஹிப் கெய்க்வாட் சார்பில் அப்போதைய பிரதமர் நேரு ஒரு ‘ரோல்ஸ் ராய்ஸ்’ கார் ஒன்றை ஆர்டர் செய்தார். அந்த கார், கையால் தயாரிக்கப்பட்டது ஆகும். குறித்த கார் மாடல் ஒன்று மட்டுமே உள்ளது. குறித்த கார் தற்போது, அப்பெண்ணின் தந்தை வசம் உள்ளது.

திருமணத்துக்கு பிறகு, அந்த காரையும், மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பையும் வரதட்சணையாக அளிக்குமாறு தன்னை கணவரும், அவருடைய குடும்பத்தினரும் துன்புறுத்தியதாக, மத்தியபிரதேச உயர் நீதிமன்ற குவாலியர் கிளையில் அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். ஆனால், கணவர் குடும்பம் அந்த புகாரை மறுத்த நிலையில், குறித்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பெண் மேல்முறையீடு செய்தார். அங்கும் அவர் ‘ரோல்ஸ் ராய்ஸ்’ கார் கேட்டதாக குறிப்பிட்டார். இதற்கிடையே, பெண்ணுக்கு கணவர் ரூ.2 கோடியே 25 லட்சம் தர வேண்டும் என்று இருதரப்புக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு இந்த உடன்பாடு தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று, இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், இருவரும் ஒருவரையொருவர் அவதூறு பேசக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
English Summary
A descendant of Chhatrapati Shivaji Maharaj gets divorced over a Rolls Royce ordered by Nehru for the Maharani of Baroda