ஓடும் பஸ்ஸில் பிறந்த குழந்தை ஜன்னல் வழியாக வீசி கொலை! பரபரக்கும் மராட்டியப் பகுதி!
A child born in a moving bus is thrown out of the window and killed! A shocking incident in the Marathi region
ஓடும் சொகுசு பஸ்சில் குழந்தை பிறந்ததும், அதனை ஜன்னல் வழியாக வெளியே வீசி கொன்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 வயது ரித்திகா தேரே, கணவர் என கூறும் அல்தாப் ஷேக் உடன் புனே, பர்பானி வழித்தடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்.அப்போது காலை 6.30 மணிக்கு பஸ்சில் பயணம் செய்தபோது பத்ரி-சேலு சாலை பகுதியில் ரித்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது,இதையடுத்து அவருக்கு பஸ்சிலேயே ஆண் குழந்தை பிறந்தது.
பிறந்த குழந்தையை துணியில் கட்டி, யாரும் அறியாமல் ஜன்னல் வழியாக வெளியே வீசி எறிந்தனர்.அப்போது அந்த குழந்தை மரணம் அடைந்தது .இதனை கண்ணாடிவழியாக கவனித்த பஸ் டிரைவர் சந்தேகத்தில் இருந்தபோது, சாலையில் இருந்த ஒருவர் சம்பவத்தை நேரில் பார்த்து போலீசில் புகார் செய்தார்.
போலீசார் பஸ்ஸை துரத்தி பிடித்து, சந்தேகத்திற்கிடையில் தம்பதியிடம் விசாரணை நடத்திய போது,"வளர்க்க முடியாது என்பதால் குழந்தையை வீசியோம்" என அந்த தம்பதியினர் தெரிவித்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் ஒன்றரை ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருவது உறுதியானது,

அதற்கான திருமண ஆவணங்கள் இல்லை.இதனால் இருவருக்கும் வழக்கு பதிவு, விசாரணை தொடருகிறதுஇந்தக் கொடூர சம்பவம், பர்பானி முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A child born in a moving bus is thrown out of the window and killed! A shocking incident in the Marathi region