சட்ட விரோதமாக தகவல் அனுப்பியதாக கூறி இளம்பெண்ணிடம் பணமோசடி - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.!
73 lakhs money fraud to women in kerala
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணின் செல்போனுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி விமான நிலையம் அருகே உள்ள தனியார் டெலிகாம் நிறுவன அலுவலகத்தில் ஆதார் கார்டை பயன்படுத்தி சிம் கார்டு எடுத்து, சட்ட விரோதமான செயல்களுக்கு பயன்படுத்தி தகவல்கள் அனுப்பி உள்ளீர்கள்.
இதற்காக மராட்டிய போலீசார் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் இருந்து விடுவிக்க குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு பணம் செலுத்துமாறும், அனுப்பி வைத்த பணத்தை திரும்ப தருவதாகவும் மர்ம நபர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை உண்மை என்று நம்பிய இளம்பெண், அந்த வங்கி கணக்குகளுக்கு கடந்த மாதம் 20-ந் தேதி முதல் கடந்த 12-ந் தேதி வரை பல தவணைகளாக ரூ.73 லட்சத்து 20 ஆயிரம் அனுப்பி உள்ளார். ஆனால், இளம்பெண் அனுப்பிய பணம் திரும்ப கிடைக்கவில்லை.இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், சம்பவம் குறித்து திருச்சூர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மர்மநபர்கள் இளம்பெண்ணிடம் ரூ.73 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இந்த மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
English Summary
73 lakhs money fraud to women in kerala