மத்திய பிரதேசத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் - 2 பேர் கைது - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை கடத்தி வந்த 2 போரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் முரார் பகுதியில் இருந்து ஹெராயின் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக நேற்று இரவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அங்கு நடத்தப்பட்ட வாகன சோதனையில் காரில் சுமார் 70 லட்சம் மதிப்புள்ள 370 கிராம் ஹெராயின் போதைப் பொருளை மறைத்து வைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து 370 கிராம் ஹெராயின் போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இந்த கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கடத்தல் தொடர்பாக இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

70 lakhs worth heroine seized in madhya pradesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->