தொடரும் தெரு நாய்களின் அட்டகாசம்.. 7 வயது சிறுவன் பரிதாப பலி.!
7 years old boy death dog bite
இந்தியாவின் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக பொது இடங்களில் நடந்து செல்பவர்கள் மற்றும் சிறுவர்களை கொடூரமாக தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்த சாலையோரங்களில் சிறு பொருட்களை விற்கும் சிறுவன் சோட்டு (வயது 7). இந்த சிறுவன் கடந்த 16ஆம் தேதி அன்று பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த தெரு நாய்கள் திடீரென துரத்தி தாக்கத் தொடங்கியுள்ளது.

இதில் தெரு நாய் ஒன்று சிறுவனின் கழுத்தைப் பிடித்து கடித்துள்ளது. இதனிடைய கத்தி கூச்சலிட்ட சிறுவனின் அழுகுரலை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தெரு நாய்களை துரத்திவிட்டு சிறுவனை விட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிறுவன் சிகிச்சை பலன்களை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து வாரங்கல் மேற்கு தொகுதி எம்எல்ஏ உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்து ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளார்.
English Summary
7 years old boy death dog bite