#மகாராஷ்டிரா: நவி மும்பையில் 2 கார்கள் மோதி விபத்து - 5 பேர் காயம் - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 5 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள பாம் பீச் சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் ஒரு கார் மிகவும் சேதமடைந்த நிலையில், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். மேலும் மற்றொரு கார் இந்தக் கார் மீது மோதி அருகில் இருந்த கால்வாய்க்குள் விழுந்துள்ளது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நவி மும்பையின் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர், இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்ததாகவும், மேலும் இருவர் பலத்த காயமடைந்ததாகவும், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 injured as 2 cars collide in Navi Mumbai Maharashtra


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->