கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய ஆரசு உத்தரவை பிறப்பித்துள்ளர்த்து. 3ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு நேற்று இரவு 12 மணியுடன் முடிவடையும் நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு வழிமுறைகள் மற்றும் தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் சமூக இடைவெளி அவசியம். மேலும், 50 நபர்களுக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மரணம் உள்ளிட்ட  துக்க நிகழ்ச்சிகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மது, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளுக்குள் 6 அடி இடைவெளியில் வாடிக்கையாளர்கள் நிற்கலாம். 5 பேருக்கு மேல் நிற்க அனுமதியில்லை. வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அலுவலகங்களில் வெப்ப சோதனை, கை கழுவுதல் அவசியம். மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் நடமாட்டத்தை தடுக்க கூடாது. சரக்கு வாகனங்கள் மாநிலங்கள் இடையே வந்து செல்ல தடை இல்லை. பேருந்து பொதுப் போக்குவரத்தை துவங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்.

மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இரு மாநில சம்மதத்துடன் இயக்கலாம். அனைத்து விதமான பயணிகள் விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும். பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் சேவைக்கு விதிக்கப்பட்ட தடையும் தொடர்ந்து அமலில் இருக்கும்.

விளையாட்டரங்கு, ஸ்டேடியம் திறந்து கொள்ள அனுமதி, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், சிவப்பு,ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் எவை என்பதை  மாநிலங்களே முடிவு செய்யலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4th curfews instructions


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->