இந்தியாவில் தனது வேலையைக் காட்டத் தொடங்கிய டெல்டா பிளஸ்.. அதிகரிக்கும் தொற்று.! மத்திய அரசு எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுக்குள் வரும் நிலையில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் உருமாறி அதிகரித்து வருகிறது. 

கடந்த மார்ச்சில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கிய நிலை தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 15 நாட்களாக தொற்று விகிதம், 5% கீழே குறைந்துள்ளது. இரண்டாவது அலையின் போது உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸ் மிக வேகமாக பரவியது. இதனால், உயிரிழப்புகளும் அதிகரித்தது. இந்த வைரஸ் டெல்டா பிளஸ் உருமாற்றம் அடைந்து மூன்றாவது அலையை உருவாக்கும் என ஆய்வாளர்கள் சமீபத்தில் எச்சரித்தனர்.

இந்நிலையில், கொரோனாவின் மற்றொரு மாறுபாடான டெல்டா பிளஸ் தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவிலும் தனது வேலையைக் காட்டத் தொடங்கியுள்ளது. இந்த வகை வைரஸ் மராட்டியம், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் 40க்கு இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து உருமாறி வரும் கொரோனாவின் புதிய வைரஸ்கள் கவலைக்குரிய மாறுபாடு மற்றும் நலனுக்கு உரிய மாறுபாடு என இருவகையாக உலக சுகாதார நிறுவனம் பிரித்து உள்ளது. டெல்டா பிளஸ் தொற்று கவலைக்குரிய மாறுபாடாக கண்டறியப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

40 delta plus positive in india


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal