ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் குப்ராவின் மச்சல் பகுதியில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

4 பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதையடுத்து பாதுகாப்புபடையினர் அவர்களை சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மச்சல் செக்டாரில் உள்ள காலா வனப்பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீர் போலீஸ் உதவியுடன் ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை ஜம்மு- காஷ்மீர் போலீசார் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 terrorists shot dead in Jammu and Kashmir


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->