பெங்களூர் - நாகர்கோவில் சிறப்பு இரயில் உட்பட 4 இரயில்கள் இரத்து..!! - Seithipunal
Seithipunal


இந்தியளவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாநிலத்தில் ஊரடங்குகள் கடுமையாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இரயில் பயணிகளின் எண்ணிக்கையும் கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக குறைக்க தொடங்கியுள்ளது. 

தற்போது, கே.எஸ்.ஆர் - பெங்களூர் - நாகர்கோவில் இடையே இயங்கும் சிறப்பு இரயில் 07235 வரும் மே மாதம் 5 ஆம் தேதியில் இருந்து இரத்து செய்யப்படுகிறது. இதனைப்போன்று, மறுமார்கத்தில் இயங்கும் நாகர்கோவில் - கே.எஸ்.ஆர் - பெங்களூர் சிறப்பு இரயில் 07236 மே மாதம் 6 ஆம் தேதியில் இருந்து இரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதனைப்போன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள யஷ்வந்த்பூர் - கேரளா மாநிலம் கண்ணூர் இடையே இயக்கப்படும் சிறப்பு இரயில் 06537 இன்று முதல் இரத்து செய்யப்படும் நிலையில், மறு மார்க்கத்தில் இயங்கும் சிறப்பு இரயில் நாளை முதல் இரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 Special Train Cancelled Including Bangalore to Nagarcoil 4 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal