மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது! - Seithipunal
Seithipunal


மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற பொது தேர்தலில் மகளிர்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா புதிய நாடாளுமன்றத்தில் மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியுள்ளது. வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பில் 456 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில் மசோதாவுக்கு ஆதரவாக 454 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தற்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக கருதப்படுகிறது. கடந்த 1996 ஆம் ஆண்டு முதன்முதலாக தேவகவுடா தலைமையிலான அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்த போது மக்களவையில் தோல்வி அடைந்த நிலையில் இன்று மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

33 percentage Reservation bill for women passed in Lok Sabha


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->