மெக்சிகோவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் 28 பேர் பரிதாபமாக பலி..!
28 people tragically died in floods and landslides in Mexico
மெக்சிகோவில் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 28 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதில் மத்திய மாநிலமான ஹிடால்கோ கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
குறித்த நிலச்சரிவில் ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளதோடு, 59 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், 308 பள்ளிகள் சேதம் அடைந்தன. 17 மாநிலங்களைச் சேர்ந்த 84 நகராட்சிகள் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மும்முரமாக நடந்துவரும் மீட்புப் பணிக்கான 8700 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளின் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளன. அதில், வீதிகள் ஆறுகளாக மாறி, வாகனங்கள் மற்றும் வீடுகளை கிட்டத்தட்ட முழுமையாக நீரில் மூழ்கடித்துச் செல்லும் வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், மெக்சிகோவின் வெராக்ரூஸில் உள்ள டக்ஸ்பானில் ஒரு உணவகம் வெள்ளத்தில் அடித்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
English Summary
28 people tragically died in floods and landslides in Mexico