இந்தியாவில் ஒரே நாளில் 10,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. இதனால், பலர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 260,311,095 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வைரசால் 5,199,469 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 235,255,756 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, மற்றும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனாவால் 10,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 488 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,45,55,431 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,39,77,830 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,67,468 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

26 nov corona report in india


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->