மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணியில் திடுக்கிடும் தகவல்: 2002 வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்போகாத 26 லட்சம் வாக்காளர் பெயர்கள்..? - Seithipunal
Seithipunal


பீஹாரை தொடந்து, தமிழகம், கேரளா மற்றும் மேற்கு வாங்க மாநிலம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முதற்கட்டமாக நடைபெறுகிறது. அதன்படி, மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து வரும் எஸ்ஐஆர் பணிகளின் போது 26 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், 2002-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்போகவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தாண்டு தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேரணி நடத்தியுள்ளார். அத்துடன், எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையகத்திற்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், தற்போதைய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் 26 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், 2002-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்போகவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையக அதிகாரி ஒருவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் இதுவரை 06 கோடி படிவங்கள் விண்ணப்படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பிறகு, முந்தைய எஸ்ஐஆர் பணியுடன், தற்போதைய பட்டியல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இதில் 26 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் ஒத்துப்போகவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடர்ந்து நடப்பதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

26 lakh voter names not matching with 2002 voter list in SIR work in West Bengal


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->