ஊரடங்கு உத்தரவை மீறிய 2535 பேர் கைது.. அதிரடி காட்டிய காவல்துறை.! - Seithipunal
Seithipunal


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் 657 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. மேலும் இந்த வைரசுக்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஊரடங்கு உத்தரவு அத்தியாவசிய காரணங்கள் தவிர மற்ற காரணங்களுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் பரவுவதை பொருட்படுத்தாத சிலர் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் பயணம் செய்தல், காரணமின்றி பொது இடங்களுக்கு வந்து செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை காவல் துறையினர் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர். 

இந்நிலையில் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை மீறியதாக கேரளா மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 2535 பேர் பேர் மீது அம்மாநில பேரை அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர். ஊரணிக்கு மீறி சாலையில் இயக்கப்பட்ட 1636 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2535 people arrested kerala police


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->