தென்னிந்தியாவில் இருந்து செல்லும் 24 ரெயில்கள் ரத்து - ரெயில்வே துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தென் இந்தியாவில் இருந்து செல்லும் 24 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

"கோவை - நிஜாமுதின் கொங்கு விரைவு ரெயில் டிச.31, ஜன.7 தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜன.3, 10 தேதிகளிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படும். திருநெல்வேலி - பிலாஸ்பூா் இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் டிச.31, ஜன.7 தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜன.2, 9 தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.

கேரளத்தின் கொச்சுவேலி, எா்ணாகுளத்தில் இருந்தும் பெங்களூரில் இருந்தும் உத்தர பிரதேசம், பீகார், சத்தீஸ்கா் மாநிலங்களுக்குச் செல்லும் ஹம்சாபா், ராப்திசாகா் உள்ளிட்ட 24 விரைவு ரெயில்கள் டிச.30 முதல் ஜன.13-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

மேலும் டெல்லியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் கரீப் ரத் அதிவிரைவு ரெயில் ஜன.1, 8 தேதிகளில் வாராங்கல், விஜயவாடா, ஓங்கோல் வழியாக வருவதற்கு பதிலாக பெத்தப்பள்ளி, நிஷாமாபாத், காச்சிக்கூடா, ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும். 

இதேபோல், சென்னை சென்டிரல் - பிலாஸ்பூா் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரெயில் (எண்:12851/12852) விஜயவாடா வழியாக இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24 train service cancelled southern railway infor


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->