ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் - நாக்பூர் விமான நிலையத்தில் சிக்கிய பயணி.! - Seithipunal
Seithipunal


ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் - நாக்பூர் விமான நிலையத்தில் சிக்கிய பயணி.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக மும்பை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். 

அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த விமானத்தில் இறங்கிய பயணி ஒருவரின் உடைமைகளில் சோதனை செய்ததில் இரும்பு ரோலர் எந்திரத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 3 கிலோ எடையுள்ள அம்பேடமன் என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. 

இவற்றின் மதிப்பு ரூ.24 கோடி ஆகும். உடனே அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பயணியை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர் கென்யா நாட்டின் நைரோபி நகரை சேர்ந்தவர் என்பதும், சார்ஜா, ஐக்கிய அரபு அமீரகம் வழியாக நாக்பூருக்கு வந்து இறங்கியபோது பிடிபட்டதும் தெரிய வந்தது. 

மேலும் அவர் இந்த போதைப்பொருளை டெல்லியில் சுபாஷ் நகர் பகுதியை சேர்ந்தவருக்கு ஒப்படைக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டெல்லி சென்று அந்த நபரையும் கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல், இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24 crores worthable drugs seized in nakpur international aiport


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->