8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. பெயிண்டருக்கு 22 ஆண்டுகள் ஜெயில்..!
22 Year jail For painter who sexually abused 8 years old girl
8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 22 நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர் பொன்பேத்தி பகுதியில் வசித்து வருபவர் ஜெயராமன். இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2020ம் ஆண்டு அவரது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்பளித்த நீதிமன்றம் ஜெயராமனுக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு 20 ஆண்டுகளும் சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்தற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. மேலும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டு என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
22 Year jail For painter who sexually abused 8 years old girl