தினமும் 20 இந்தியர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு…5 ஆண்டுகளில் 37,740 மரணங்கள்...! -அரசு புள்ளிவிவரம் அதிர்ச்சி - Seithipunal
Seithipunal


வெளிநாடுகளில் இந்தியர்களின் உயிரிழப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளில் கவலைக்கிடமாக உயர்ந்துள்ளது. தினமும் சராசரியாக 20-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்து வருவதாக அரசின் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, இந்த மரணங்களில் பெரும்பாலானவை வளைகுடா நாடுகளிலேயே நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலை வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக வெளியிட்டார். அதன்படி, 2021 முதல் 2025 வரை வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை 37,740 ஆக உயர்ந்துள்ளது.

எனினும், இந்த உயிரிழப்புகளுக்கான துல்லியமான காரணங்கள் வெளியிடப்படாதது மேலும் கேள்விகளை எழுப்புகிறது.புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, 2021 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 8,234 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன் பின்னர் 2022-ல் 6,614 ஆக குறைந்தாலும், மீண்டும் உயர்ந்து 2023-ல் 7,291, 2024-ல் 7,747, 2025-ல் 7,854 என ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது.

இந்த உயிரிழப்புகளில் 86% க்கும் அதிகமானவை வளைகுடா நாடுகளில் பதிவாகியுள்ளன. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் மட்டும் முறையே 12,380 மற்றும் 11,757 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவல்கள், வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் குறித்து தீவிர கவனம் தேவை என்பதை வெளிப்படையாக காட்டுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 Indians die abroad every day 37740 deaths 5 years Government statistics shock


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->