195 புலம்பெயர் பாகிஸ்தானியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக நம் நாட்டிற்குள் வந்த 195 பேருக்கு இந்திய குடியுரிமைக்கான சான்றிதழை பெற்றுள்ளனர். 

ஆமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்வி குறித்த 195 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்ககளை வழங்கியுள்ளார். இவ்வாறு குடியுரிமை பெற்றவர்கள், ஹிந்து, சீக்கிய, பவுத்த மற்றும் சமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்வி தெரிவித்ததாவது: 'புன்னகையோடு வாழுங்கள். இனி நீங்கள் இந்திய குடிமக்கள். இந்தியாவில் தஞ்சம் அடைந்தவர்கள், முந்தைய அரசுகளின் (காங்கிரஸ்) புறக்கணிப்பால், இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வந்தனர். பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு, 1947 மற்றும் 1956க்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்து, அகதிகளாக வாழ்ந்து வந்தவர்களின் நீண்ட கால கனவான இந்திய குடியுரிமையை பெற வழிவகை செய்தது.' எனக் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியர்களில் 195 பேரில் 122 பேர் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற்றனர். மீதமுள்ள 73 பேர் ஆமதாபாத் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்ததன் அடிப்படையில் குடியுரிமை சான்றிதழ்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை திருத்தச் சட்டம்

கடந்த 2019-ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், 2024-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது. 2014, டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இந்தியாவுக்கு வந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

195 Pakistani expatriates have been granted Indian citizenship


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->