வழமைக்கு திரும்பும் இண்டிகோ; இன்று 1650 விமானங்கள் இயக்கம்..!
1650 IndiGo flights operating today
ஆமதாபாத் விமான விபத்து நாட்டை உலுக்கிய நிலையில், அனைத்து விமானிகளின் பணி நேர விதிகளில் அண்மையில் மத்திய அரசு மாற்றத்தை அறிவித்தது. அதன்படி, தனது விமானிகளின் பணிநேர மாற்றங்களை சரியாக திட்டமிட்டு இண்டிகோ நிறுவனம் செயல்படுத்த தவறவிட்டுள்ளது.
இதன் காரணமாக, புதிய பணி விதிகள் அமலுக்கு வந்ததும் விமானிகளின் பற்றாக்குறை ஏற்பட்டதால், நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் ஸ்தம்பித்தன. இதன் எதிரொலியாக தினமும் நுாற்றுக்கணக்கான இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஒரு வாரமாக நீடிக்கும் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் மத்திய அரசும் தீவிரமாக இறங்கியுள்ளது.

நாள்தோறும் சராசரியாக இயக்கப்பட வேண்டிய 2300 விமானங்களில் 1650 விமானங்களை மட்டுமே இயக்கி வருவதாக இண்டிகோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, நேற்றைய தினம் 1500 விமான சேவைகள் இருந்த நிலையில் இன்று, 1650 ஆக அதிகரித்துள்ளதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
இந் நிலையில், இன்றும் அடுத்தடுத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அந்தவகையில், முக்கிய நகரங்களில் ரத்து செய்யப்பட்ட விமான சேவைகளின் எண்ணிக்கை;
01- ஹைதராபாத் - 115 விமானங்கள்.
02- மும்பை - 112 விமானங்கள்.
03- புதுடில்லி - 109 விமானங்கள்.
04- கோல்கட்டா - 76 விமானங்கள்.
05- ஆமதாபாத் - 20 விமானங்கள்.
06- புனே - 25 விமானங்கள்.
07- அகர்தலா - 6 விமானங்கள்.
08- திருச்சி - 11 விமானங்கள்.
English Summary
1650 IndiGo flights operating today