ஹூக்கா பார்லாரில் போதைப்பொருள் - பிக் பாஸ் பிரபலம் உள்பட 14 பேர் கைது.!
14 peoples arrested for drugs sales in maharastra
மகாராஷ்டிரா மாநிலத்தின் தெற்கு மும்பை நகர் கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லர் ஒன்று உள்ளது. இந்த பார்லரில், மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுகிறது என்று போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது.

அந்தத் தகவலின் படி போலீசார் தனிப்படை அமைத்து அந்த பார்லருக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பார்லரில் இருந்த 14 பேர் போலீசாரின் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பிக்பாஸ் சீசன் 17-ல் வெற்றி பெற்ற போட்டியாளரான முனாவர் பரூக்கியும் ஒருவர் ஆவார்.
இதுகுறித்து வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஜாமீனில் வெளிவர கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றை கொடுத்து விட்டு பரூக்கி விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
14 peoples arrested for drugs sales in maharastra