சாலை விபத்தில் சிக்கி 14 பேர் பலி..ராய்ப்பூரில் சோகம்!
14 people lost their lives in a road accident mourning in Raipur
50 பேரை ஏற்றிச் சென்ற மினி லாரி விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகினர்.மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர்,பனார்சி கிராமத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு விட்டு 50 பேர் மினி லாரி ஒன்றில் சவுதியா சட்டியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வேகமாக வந்த டிரெய்லருடன் எதிர்பாரதமாக மோதியதில் சம்பவஇடத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழ்ந்தனர். இந்த கோர விபத்தில் 10 பெண்கள், 2 சிறுமிகள், 1 சிறுவன் மற்றும் 6 மாதக் குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.அங்கு பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.மேலும் இந்த விபத்து குறித்து கரௌரா போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
English Summary
14 people lost their lives in a road accident mourning in Raipur