கன்வர் யாத்திரை: ஹரித்துவாரில் சோதனையில் சிக்கிய 125 கிலோ வெடிபொருட்கள்: வழித்தடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு..!
125 kg of explosives seized during a search on the Kanwar Yatra routes in Haridwar
வட மாநிலங்களில் சிவபக்தர்கள் ஆண்டுதோறும் கன்வர் யாத்ரா என்ற காவடி யாத்திரையை கொண்டாடுவர். இந்த புனித யாத்திரை வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தம். 2025-ஆம் ஆண்டுக்கான கன்வர் யாத்ரா கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. கங்கை நதியை ஒட்டிய புனித தலங்களுக்கு நடைபயணமாக சென்று அங்கு கலசங்களில் நீரை சேகரித்து தங்களின் ஊர்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வர்.
இந்நிலையில், டேராடூனில் 125 கிலோ வெடிபொருட்கள் வாகன சோதனையின் போது போலீசார் கண்டுபிடித்துள்ளனர். டியுனி என்ற பகுதியில் உள்ளூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை சோதனையிட்ட போது அதில் இருந்த 03 பேர் முன்னுக்கு முரணாக பேசி உள்ளனர்.
அவர்களின் காரில் 05 மிக பெரிய பெட்டிகளில் டைனமெட் வெடி பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து, காரில் இருந்த 03 பேரையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
விசாரணையில் போது அவர்கள் ரிங்கு, ரோகித், சுனில் என்பதும், அவர்கள் மூவரும் ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. ஆனால் விசாரணையில் அவர்கள் ஹிமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட் இடையே சாலை கட்டுமான பணிகளுக்கு வெடி பொருட்கள் கொண்டு செல்வதாக கூறியுள்ளனர்.
ஆனால், அதில் உள்ள உண்மைத்தன்மை குறித்து போலீசார் சந்தேகம் எழுப்பி யுள்ளதோடு, எதற்காக வெடி பொருட்கள் கடத்தப்பட்டன, என்ன காரணம் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து டேராடூன் எஸ்.எஸ்.பி., அஜய் சிங் கூறுகையில், உத்தராகண்டில் பஞ்சாயத்து தேர்தல்கள் வரும் ஜூலை 24 மற்றும் 28 தேதிகளில் நடக்கிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், கன்வர் யாத்திரையும் தொடங்கியுள்ளது. தேர்தல் நேரம் மற்றும் கன்வர் யாத்திரை காலம் என்பதால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, ஹரித்துவார் எஸ்.எஸ்.பி., பிரமோத் சிங் கூறுகையில், தற்போது கன்வர் யாத்திரை உச்சக்கட்டத்தில்உள்ள நிலையில், லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் ஹரித்துவார் நோக்கி வந்து கொண்டு இருக்கின்றனர். எனவே, 125 கிலோ வெடிபொருட்கள் சிக்கியதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
125 kg of explosives seized during a search on the Kanwar Yatra routes in Haridwar