மும்பை || சட்ட விரோதமாக தங்கியிருந்த 112 வங்க தேசத்தினர் நாடு கடத்தல்.!!
112 Bangladesh peoples deportation from mumbai
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பெருநகரில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் வசித்து வருகின்றனர். போலீசார் அவர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகின்றனர். அந்த வகையில், மும்பை பெருநகரில் சட்டவிரோதமாக வசித்து வந்த 112 வங்கதேசத்தினர் கடந்த வியாழக்கிழமை அன்று நாடு கடத்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 92 பேர் மும்பையிலும், 20 பேர் தானே பகுதியிலும் வசித்து வந்தனர். இந்த 112 பேரும் புனே கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானப்படை விமானத்தில் அசாம் - வங்கதேச எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு, வங்கதேச பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதன் மூலம் நடப்பாண்டில் மட்டும் மும்பையில் இருந்து வங்கதேசத்துக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 719 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு மும்பையில் இருந்து 152 வங்கதேசத்தினர் மட்டுமே நாடு கடத்தப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
112 Bangladesh peoples deportation from mumbai