இந்திய நாட்டிற்குள் அத்துமீறிய வங்கதேசத்தினர் 11 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த வங்காளதேச நாட்டைச் சேர்ந்த பதினொரு பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

வங்காளதேசம் நாட்டில் அரசுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அந்நாட்டில் இருந்து சிலர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கின்றனர்.

இதனைத் தடுக்கும் விதமாக இந்திய எல்லைகள் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தினரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

இதுவரைக்கும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பு படையினர் விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர். இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 bangaladesh peoples arrest in india


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->