இந்தியாவில் அதிரடியாக உயர்ந்த கொரோனா தொற்று.. ஒரே நாளில் இத்தனை பேருக்கா.? - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 295,585,822 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் 5,474,166 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 256,116,403 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, மற்றும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.  

இந்நிலையில், இந்தியாவில் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனாவால் 58,097 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 534 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,50,18,358 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,43,21,803 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,82,551 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 1,47,72,08,846 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 2,135 ஆக அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

05 jan corona and omicron report in india


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->