தமிழகத்தில் எஸ்ஐஆர்: 05 கோடியே 67 ஆயிரத்து 45 விண்ணப்பங்கள் விநியோகம்..! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் எஸ்ஐஆர் (SIR) எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 05 கோடியே 67 ஆயிரத்து 45 எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்று 15 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், வாக்காளர்களின் இடப்பெயர்ச்சி, அவர்களின் மரணம் ஆகியவற்றை கணக்கெடுத்து பட்டியலில் இருந்து நீக்கவும், 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் முதல் கட்டமாக பீஹார் சட்டமன்ற தேர்தலையொட்டி, இந்த பணிகள் தொடங்கப்பட்டன. இதனையடுத்து அடுத்த வருடம் பொது தேர்தலை சந்திக்கவுள்ள தமிழகம், மேற்கு வங்கம், உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மாநிலங்களில் சரியான வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் கடந்த நவம்பர் 04-இல் தொடங்கப்பட்டது. டிசம்பர் 04 வரை ஒரு மாதம் வரை நடக்கிறது.

SIR பணிகள் தொடங்கி ஒரு வாரம் முடிந்துவிட்டது. எனவே எந்ததெந்த மாநிலங்களில் என்ன மாதிரியான பணிகள் நடைபெற்று வருகின்றன வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எத்தனை விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் மட்டும் 5 கோடியே 67 ஆயிரத்து 45 எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பணிக்காக 68,467 பூத் லெவல் அதிகாரிகள், 2,11,445 பூத் லெவல் முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 27, 2025-ஆம் ஆண்டு கணக்கீட்டின் தமிழகத்தில் மொத்தம் 06 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர் இருக்கின்றனர். இவர்களுக்காக 06 கோடியே 41 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் இதுவரை 05 கோடியே 67 ஆயிரம் பேருக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அதாவது, விண்ணப்பங்களில் 78.09 சதவீதம் வினியோகிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மற்ற மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளுக்காக எத்தனை வாக்காளர் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளன என்ற விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக உ.பி.யில், 10 கோடியே 80 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேற்கு வங்கத்தில் 06 கோடியே 80 லட்சம் விண்ணப்பங்களும், மத்திய பிரதேசத்தில் 03 கோடியே 09 லட்சம் விண்ணப்பங்களும் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

05 crore 67 thousand 45 applications distributed for SIR jobs in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->