கலப்பட 'கள்' குடித்து பறிப்போன 02 உயிர்: 28 பேர் மருத்துவமனையில் அனுமதி; 03 பேர் கவலைக்கிடம்..!
02 people die 28 hospitalized after drinking adulterated liquor
ஐதராபாத்தில் கலப்பட கள் குடித்த 02 பேர் உயிரிழந்துள்ளதோடு, 28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், குகட்பள்ளி, பாலநகர் மற்றும் நகரின் பிற பகுதிகளில் இருக்கும் வெவ்வேறு கள்ளுக்கடைகளில் பலர் கள் குடித்துள்ளனர். இவ்வாறு கள் குடித்தவர்களுக்கு மணி நேரத்தில் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில், அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், மருத்துவமனையில் கலப்பட கள் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 03 பேரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறியுள்ளார்.
-wpdy6.png)
அத்துடன், நேற்று இரவு 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், இன்று காலையில் அந்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சைபராபாத் போலீஸ் அதிகாரி கூறுகையில், நேற்று இரவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 02 பேர் இறந்து விட்டதாகவும், சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் கலால் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், விசாரணையை தொடர்ந்து இதுவரை 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கலப்பட கள் விற்பனை செய்த கடைகள் சீல் வைக்கப்பட்டு, அங்கிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளுதாகவும், அதே நேரத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
-zulsp.png)
மேலும், தெலுங்கானா கலால் மற்றும் மதுவிலக்கு அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் இன்று என்.ஐ.எம்.எஸ்., மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துள்ளார்.
அத்துடன், சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும், அத்தகைய கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் எனவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
02 people die 28 hospitalized after drinking adulterated liquor