தீராத மலச்சிக்கலா? உடனே இதை ட்ரை பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


உணவு முறை மாற்றத்தால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் முக்கியமான ஒன்று மலசிக்கல். அதனை சரி செய்வதற்கான வழிமுறையை இந்தப் பதிவில் காண்போம்.

* அதிகளவில் தண்ணீர் குடிப்பது மலத்தை மென்மையாக்கி எளிதாக வெளியேற்ற உதவும். 

* பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மலத்தை எளிதாக வெளியேறச் செய்கிறது. 

* தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழச்சாறு சேர்த்து அருந்துவது செரிமானத்தை தூண்டி மல சிக்கலை போக்குகிறது.

* நடைபயிற்சி அல்லது யோகா உள்ளிட்ட வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது குடல் செயல்பாட்டை ஆதரித்து மலச்சிக்கல்லை நீக்குகிறது. உடற்பயிற்சி செய்வது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்டுகிறது. 

* தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகும். இது மலச்சிக்கல் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.

* கற்றாழை சாற்றை சிறிதளவு உட்கொள்வதன் மூலமே மலச்சிக்கலைப் போக்க முடியும். இது குடலில் உள்ள நீரின் அளவை அதிகரித்து, குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tips of Constipation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->