மாத்திரை போடப் போறீங்களா? இதை கொஞ்சம் படிச்சிட்டு போடுங்க!
things to remember and avoid while having medicines
நாம் அனைவரும் உடல் உபாதைகள் மற்றும் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்படும் போது. அவற்றிலிருந்து மீண்டு வர மருந்து மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்துவோம். அவ்வாறு மாத்திரைகளை பயன்படுத்தும் போது நாம் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்று பார்ப்போம்.
பொதுவாக சில மாத்திரைகளின் நடுவே ஒரு கோடு இருக்கும் சில மாத்திரைகளில் இந்த கோடு இருக்காது. இதற்குக் காரணம் அந்த மாத்திரைகளின் குறிப்பிட்ட டோசேஜ் அளவை சரிசமமாக பிரித்து சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான். எடுத்துக்காட்டாக மருத்துவர் ஒரு மருந்தினை நமக்கு 50 மில்லிகிராம் அளவு பரிந்துரைத்திருக்கிறார் ஆனால் அந்த மருந்து 100 மில்லி கிராம் தான் மருந்தகத்தில் கிடைக்கிறது எனும்போது அந்த மருந்தை சரிசமமாக பிரிப்பதற்கு அந்தக் கோடுகள் அளவிடாக பயன்படும்.
மேலும் இந்தக் கோடுகள் ஏன் எல்லா மாத்திரைகளிலும் பயன்படுத்தப்படவில்லை என்றால் நாம் அந்த மாத்திரைகளை உட்கொள்ளும் அளவு மற்றும் அந்த மாத்திரைகள் நம் உடலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் அந்த மாத்திரைகளை உட்கிரகித்துக்கொள்ள நம் உடல் எடுத்துக் கொள்ளும் கால அளவு ஆகியவற்றைப் பொறுத்து மருந்திருக்கு மருந்து இவை மாறுபடும். இதற்கு உதாரணமாக என்டெர்ரிக் கோட்டட் மாத்திரைகளை குறிப்பிடலாம். இந்த மாத்திரைகள் நாம் வயிற்றில் இருக்கக்கூடிய அமிலங்களால் பாதிக்கப்படாமல் நேரடியாக குடலில் சென்று கரைந்து அதன் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற மருந்துகளை நாம் உடைத்து சாப்பிடக்கூடாது.

மேலும் சில மாத்திரைகளை நாம் எடுத்துக் கொள்ளும் போது குறிப்பிட்ட உணவுப் பொருட்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது அந்த மாத்திரைகளின் செயல்படும் தன்மை மற்றும் அவை ஏற்படுத்தக்கூடிய பக்க விளைவுகள் தவிர்க்கப்படும். குறிப்பாக பாக்டீரியா தொற்றுக்கழுக்காக எடுத்துக் கொள்ளப்படும் பென்சிலின், சிப்ரோஃப்ளாக்ஸின், சிப்ரோஃப்ளாக்ஸின் போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் வலி நிவாரணையாக எடுத்துக் கொள்ளும் இபுப்ரோஃபென் போன்ற மருந்துகளை பயன்படுத்தும் போது சர்க்கரை அதிகமாக கலந்த குளிர்பானங்களையும் கார்பனேட்டட் குளிர்பானங்களையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் இருக்கக்கூடிய கார்பன் டையாக்சைடு மற்றும் அதிகளவிலான சர்க்கரை மருந்தின் வீரிய தன்மையை பாதிப்பதோடு சிறுநீரக குறைபாடுகளையும் ஏற்படுத்தலாம்.
சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு உட்கொள்ளப்படும் மருந்துகளான ,ராமிப்ரில், எனாலாப்ரில் மற்றும் கேட்டோப்ரில் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது தக்காளி, வாழைப்பழம், கீரைகள் மற்றும் சோயா பீன்ஸ் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த உணவுப் பொருட்களில் இருக்கக்கூடிய அதிக அளவிலான பொட்டாசியம் நம் ரத்தத்தில் இருக்கக்கூடிய பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதனால் மருத்துவர்களின் பரிந்துரையுடனே இது போன்ற மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும்.
English Summary
things to remember and avoid while having medicines