இவங்க எல்லாம் பலாப்பழத்தை தொட்டு கூட பார்க்க கூடாது.?! உஷார்.! - Seithipunal
Seithipunal


வெயில் காலம் தொடங்கினாலே மாம்பழம் பலாப்பழம் சீசன் ஆரம்பம் ஆகிவிடும். பலாப்பழம் பிடிக்காத நபர்களே இருக்க மாட்டார்கள். ஆனால் இப்படிப்பட்ட பலாப்பழத்தை சாப்பிடுவது கீழ்காணும் நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியுமா?

ஒரே நேரத்தில் அதிக அளவிலான பலாப்பழம் சாப்பிடுவது வாந்தி, வயிற்று வலி மற்றும் ஒவ்வாமை ஏற்படுத்த கூடும். மருந்து மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக் கொள்பவர்கள் பலாப்பழத்தை சாப்பிடுவது அவர்களுக்கு மயக்க நிலையை ஏற்படுத்தும். 

எனவே, மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் இதை எடுத்துக் கொள்ள வேண்டாம். அல்லது அன்றைய பொழுதில் மருந்து மாத்திரையை புறக்கணிக்க கூடிய அளவில் உடல்நிலை இருக்குமாயின் அவர்கள் பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு அன்று மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

இதில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் இருப்பதால் உடல் எடை கிடுகிடுவென உயர வழிவகை செய்யும். சிலருக்கு பலாப்பழம் சாப்பிட்டவுடன் வீக்கம், அரிப்பு, சுவாசக் கோளாறு உள்ளிட்டவை ஏற்படலாம். அவர்கள் பலாப்பழத்தை தொட்டுக் கூட பார்க்க கூடாது.

ரத்த சம்பந்தப்பட்ட நோய் இருப்பவர்கள் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் சிறுநீரக கோளாறு அபாயம் இருப்பவர்கள் பலாப்பழத்தை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Some peoples don't eat jackfruit


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?
Seithipunal
--> -->