வாய்ப்புண் தானே என்று சாதாரணமா நினைக்காதீங்க.! விபரீதம் ஆகலாம்.! உடனே இதை செய்யுங்கள்.!  - Seithipunal
Seithipunal


வாய்ப்புண் மற்றும் உதடு வெடிப்பு என்பது பெரும்பாலும் நீரை குறைவாக அருந்துபவர்களுக்கு வரும் பாதிப்பு ஆகும். உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் நேரத்தில், உடலில் குடல் பாதிப்பு ஏற்பட்டு புற்றுநோய் உள்ளிட்ட பல விதமான பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு. இந்த பிரச்னையை தீர்ப்பது குறித்து இனி காண்போம்.

சீரகம் மற்றும் நாட்டு சர்க்கரையை சம அளவில் எடுத்துக்கொண்டு, பொடியாக அரைத்து கொண்டு காலை மற்றும் மாலையில் ஒரு தே.கரண்டி அளவிற்கு சாப்பிட்டு வந்தால் உதட்டு புண் மற்றும் உதட்டு வெடிப்பானது குணமடையும்.

திருநீற்றுப்பச்சை இலையை தினமும் 4 இலைகள் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் குணமாகும்.

நெல்லி மரத்தின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு, நீரில் நன்றாக கொதிக்க வைத்து, இளம் சூட்டை (பருகும் அளவிற்கு சூடு இருந்தால் போதுமானது) அடையும் பட்சத்தில், வாயை கொப்புளித்து வந்தால் வாய்ப்புண்ணானது எளிதில் குணமாகும்.

மணித்தக்காளி இலைகளை எடுத்து கொண்டு, அதனை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் குணமாகும். மேலும், மணித்தக்காளி இலைகளை மென்று நாளொன்றுக்கு 6 முறை உண்டால் வாய்ப்புண் குணமாகும்.
 
மருதாணியின் இலைகளை சுமார் 1 மணிநேரம் ஊறவைத்து, பின்னர் கொதிக்க கொதிக்க காய்ச்சி, அந்த நீரை கசாயம் போல் வாய்கொப்புளித்து வந்தால் வாய்ப்புண், வாய்வேக்காடு மற்றும் தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

ஆவாரம் மரத்தின் பட்டைகளை பொடியாக அரைத்து., கசாயமாக மாற்றி வாய்கொப்புளித்து வந்தால் வாய்ப்புண் மற்றும் வாயில் ஏற்படும் துர்நாற்றமானது நீங்கும்.

கொய்யா மரத்தின் இலைகளை மென்று, பலதேய்த்து வந்தால் பல் வலி மற்றும் வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் குணமடையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SOLUTION FOR LIP ISSUES


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
Seithipunal