முதுகு வலியை தவிரக்க சில வழிமுறைகள்., கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு..!! - Seithipunal
Seithipunal


சிலர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் முதுகுவலி ஏற்படுகிறது. கணிணி முன்பு நீண்ட நேரம் அமர்ந்திருத்தல், உட்கார்ந்த நிலையில் இருக்கும் வேலைகளை செய்பவர்களுக்கு, முதுகு வலி பிரச்சனை இருக்கிறது. முதுகு வலியை தடுக்க சில வழிமுறைகளை பயன்படுத்தலாம்.

நல்ல நிலை: கணினியில் வேலை செய்வர்கள் உட்கார்ந்த நிலையில் வேலை செய்வதால் அவர்களுக்கு முதுகெலும்பு மற்றும் முதுகெலும்பு தசைகளின் மீது ஏற்படும் அழுத்தம் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் அதிக வலியை உண்டாக்குகிறது.

அதிகம் மொபைல் போன் பயன்படுத்துபவர்களும், கழுத்துப் பகுதியை வளைத்து, முதுகெலும்புக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கின்றனர்.இந்த பிரச்சனையில் இருந்து விடுபட நல்லநிலையில் அமர்ந்திருப்பது அவசியமாகிறது.

இடைவெளி: நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும் போது அடிக்கடி இடைவெளி எடுத்து கொள்வது அவசியமாகிறது. இதனால், மன அழுத்ததைக் குறைப்பது மட்டுமல்லாமல், முதுகெலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தங்களும் குறையும். 

நடைப்பயிற்சி: நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது உடலுக்கு தேவையான ரத்த ஓட்டம் அனைத்து பகுதிகளுக்கும் சீராக எடுத்துச் செல்லப்படுகிறது. . மேலும், ரத்தத்தில் செல்லும் ஆக்சிஜன் மற்றும் ஊட்டசத்துக்களின் அளவும் கூடுகிறது. இவை தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுத்து வலியைக் குறைக்கிறது

உணவு முறை: கொழுப்பு உணவுகள், உடல் எடையைக் கூட்டி, தசை எலும்புகளில் அழுத்தத்தை அதிகரிக்க காரணமாக அமைகின்றன. மேலும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், குறைந்த கொழுப்பு நிறைந்த உணவுகள், கால்சியம் ஊட்டச்சத்து, அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்த உணவு, புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Solution for back pain


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->