அதிக அளவில் ''இறால்'' சாப்பிடுவது நன்மையா..? தீமையா..? - Seithipunal
Seithipunal


சிக்கன், மட்டன் போல கடல் உணவுகளையும் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். கடல் உணவான மீனில் அதிக அளவில் ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளது. 

அது போல் இறாலில் அதிக அளவிலான புரதம், வைட்டமின் டி, அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைப்பவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சருமம் சுருங்கி வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி முக்கிய காரணமாக உள்ளது. இதனால் இறாலை தினமும் அல்லது வாரத்தில் ஒரு முறை எடுத்துக் கொண்டால் சருமம் அழகாகும்.

இறால் அதிக அளவில் சாப்பிடுவதால் கண் பார்வை சிதைவில் இருந்து காக்கும். மேலும் கண் வலியை போக்கவும் உதவுகிறது. கணினி, செல்போன் போன்றவற்றில் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் வாரத்தில் இரண்டு முறை இறால் சாப்பிடுவது நல்லது. 

இறாலில் உள்ள கனிமங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். ஜிங்க் குறைபாடு இருப்பதால் முடி உதிர்தல் ஏற்படும். இதனால் முடி உதிர்வை குறைக்க இறாலை உணவில் சேர்த்து கொண்டால் முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு முக்கிய பங்காற்றுகிறது. 

இதயக் குழாயில் ஏற்படும் நோய்களை தடுக்க இறால் நல்ல மருந்தாக உள்ளது. இதில் அதிக அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால் ரத்த ஓட்டத்தை சீராக்கும். நெஞ்சு வலி, வாதம் போன்றவற்றை குறைக்கும். 

இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் போன்ற பல வைட்டமின்கள் இருப்பதால் எலும்பு சிதைவு, எலும்பு தரம் போன்றவற்றை பாதுகாக்கும். வாரத்தில் இரண்டு முறை இறாலை உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்பில் ஏற்பட்ட பிரச்சனை நீங்கி வலுப்பெறும்.

கடல் உணவான இறால் உட்கொள்ளும் பொழுது அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய வகை மீன் அல்லது இறால் உண்ணும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் பல விதமான அலர்ஜிகள் ஏற்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

shrimp eating many benefits


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->