மக்களே உஷார் ! அதிக நேரம் செல்போன் யூஸ் பண்றீங்களா.. சர்க்கரை நோய் குறித்து மருத்துவர்கள் வார்னிங்! - Seithipunal
Seithipunal


உலகளவில் சர்க்கரை நோய் அதிகம் காணப்படும் நாடுகளில் இந்தியாவும் முக்கிய மாநிலம். நாடு முழுவதும் 10.1 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டுமே இந்த எண்ணிக்கை 44% உயர்ந்திருப்பது கவலையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி போன்ற திரை சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் என்று சென்னை மருத்துவர்கள் நடத்திய ஆய்வு புதிய எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

சென்னை கிளினிக்கல்ஸ் மருத்துவமனையின் டாக்டர் அஸ்வின் கருப்பன் தலைமையிலான மருத்துவர்கள் குழு நடத்திய ஆய்வில், குறிப்பாக வார இறுதி நாட்களில் அதிக நேரம் ஸ்கிரீன் பார்ப்போர் — டைப் 2 நீரிழிவு நோயாளிகளில் — இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மோசமடைவது கண்டறியப்பட்டுள்ளது. தினசரி ஸ்கிரீன் டைம், தூக்க அளவு, HbA1c மதிப்புகள் ஆகியவை 217 நோயாளிகளில் ஆய்வு செய்யப்பட்டன.

மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனையின் பேரில், ஸ்கிரீன் டைமை 30 முதல் 45 நிமிடங்கள் குறைத்த பின்னர், மூன்று மாதங்களில் அவர்களின் HbA1c 7.47% இலிருந்து 7.21% ஆகக் குறைந்தது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு திரை நேர கட்டுப்பாடு நேரடியாக நன்மை தரும் என்பதை உறுதி செய்கிறது.

ஆய்வில், நீண்ட நேர ஸ்கிரீன் பார்ப்பதால் ஏற்படும் முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

  • உடல் செயல்பாடு குறைவு

  • அடிக்கடி சிற்றுண்டி சாப்பிடும் பழக்கம்

  • தூக்க தரம் குறைவு

  • மன அழுத்தம் அதிகரிப்பு

இவை அனைத்தும் சேர்ந்து இரத்த சர்க்கரையை அதிகரிக்க செய்கின்றன.

மருத்துவர் அஸ்வின் கருப்பன் கூறியதாவது:
“உங்கள் மொபைல், டிவி உங்கள் சர்க்கரை அளவை சத்தமில்லாமல் பாதிக்கலாம். திரை நேரத்தை குறைப்பதன் மூலம் நீரிழிவு கட்டுப்பாட்டில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.”

அவர்கள் குறிப்பிடும் முக்கிய ஆலோசனைகள்:

  • காலை எழுந்த முதல் 1 மணி நேரமும், இரவு தூங்குவதற்கு முன் 1 மணி நேரமும் மொபைல் தவிர்க்கவும்

  • 20-20-20 விதி: ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும், 20 அடி தொலைவில் உள்ள ஒன்றைப் 20 விநாடிகள் பார்க்கவும்

  • டைம் பார்க்க மொபைல் பயன்படுத்த வேண்டாம் – கடிகாரம் பயன்படுத்தவும்

  • படுக்கை அறை, உணவு மேசையில் மொபைல், லேப்டாப் வைக்க வேண்டாம்

  • திரையில்லாத குடும்ப நேரம், மாலை நடைப்பயணம், புத்தகம் படித்தல், இசை கேட்பது போன்ற பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும்

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில், இது போன்ற எச்சரிக்கைகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

People be careful Do you use your cell phone for too long Doctors warn about diabetes


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->