மகத்தான மருத்துவ குணங்கள் நிறைந்த ''பதநீர்'' குடிப்பதால் என்ன பலன்?
pathaneer drinking benefits tamil
* கோடை காலங்களில் பதநீர் மற்றும் நுங்கு அதிக அளவில் கிடைக்கும். இரண்டுமே உடல் மற்றும் வயிற்றுப் பகுதியை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பதநீரில் சர்க்கரை சத்து அதிக அளவில் உள்ளதால் கோடை காலங்களில் ஏற்படும் சோர்வினை நீக்கும்.
* குளிர்ச்சி தரும் பதநீர் கழிவு மற்றும் வியர்வை அகற்றியாக செயல்படும். இதனுடன் சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது. எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் இருக்கும்.
* உடல் மெலிந்தவர்களுக்கு இது இயற்கை டானிக். வெயில் காலங்களில் ஏற்படும் நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் எரிச்சல், வலி போன்றவற்றை குணப்படுத்தும். பதநீர் பழைய கஞ்சியுடன் சேர்த்து குளிக்க வைத்து ஆறாத புண்கள் கொப்புளங்கள் மீது தடவினால் விரைவில் குணமடையும்.

* பதநீர் சீதோசன நிலைக்கு மிகச் சிறந்த பானமாக உள்ளது. ரத்த சோகையை போக்கும். இதில் கொழுப்பு, கால்சியம், புரோட்டின் ஆகிய சத்துக்கள் அதிகளவில் உள்ளது.
* விட்டமின் பி சத்து கொண்டுள்ள பதநீர் பித்தத்தை நீக்கி இதயத்தை வலுவாக்கும்.பதநீரில் உள்ள கால்சியம் சத்து பற்களை வலுப்படுத்தும். கோடை காலங்களில் கிடைக்கும் மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் உடல் சூட்டை பதநீர் போக்கும். பதநீர் இயற்கை நமக்கு தந்த சத்தான பானம். உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்வதற்கு பதநீர் அருமருந்தாக உள்ளது.
English Summary
pathaneer drinking benefits tamil