ஓம வாட்டரில் இவ்வளவு நன்மைகளா? மறந்து போன மருத்துவ ரகசியம்.!
Oma water benefits
நமக்கு சிறுவயதில் செரிமான கோளாறு ஏற்பட்டால் அல்லது வயிறு வலி ஏற்பட்டால் நமது அம்மா கடைகளில் சென்று ஓமதண்ணீர் வாங்கி வந்து கொடுத்து விடுவார். அதை குடித்துவிட்டு நாம் உறங்கி விடுவோம்.
ஆனால், சமீப காலமாக அப்படி ஒரு விஷயம் இருப்பதையே பலரும் மறந்து விட்டார்கள். வயிற்று வலி, வயிறு உப்பசம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஓமம் சிறந்த மருந்து.
இந்த ஓமத்துடன் பெருங்காயம் கல் உப்பு ஆகியவற்றை பொடியாக குழைத்து சாப்பிட்டு வந்தால் சிறிது நேரத்தில் வயிறு பிரச்சனைகள் சரியாகிவிடும். மூட்டு வலிக்கு ஓம எண்ணெய் நல்ல மருந்து.

இதை லேசாக தேய்த்தால் அல்லது மசாஜ் செய்தால் மூட்டு வலி குணமாகும். ஓமத்தை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அதை குடித்தால், ஆஸ்துமா குணமாகும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.
ஓமத்தில் தேங்காய் எண்ணெய் ஈவிட்டு கொதிக்க வைத்து அத்துடன் கற்பூர கோடியை கலந்து லேசான சூட்டில் சுளுக்கு, இடுப்பு வலி இருக்கும் இடங்களில் தேய்த்தால் வலி நீங்கும்.
ஓமப்பொடியையும், கல் உப்பையும் மோரில் கலந்து குடித்தால் கபத்தை வெளியேற்றும். பல் வலிக்கு இந்த எண்ணெயை பஞ்சில் தேய்த்து ஒத்தடம் கொடுத்தால் சரியாகும்.