30 வயதிற்கு மேற்பட்ட பெண்களே... இந்த மருத்துவ பரிசோதனைகள் செய்துக் கொள்ள தவறாதீங்க.! - Seithipunal
Seithipunal


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அனைத்து மக்களுமே நோயின்றி  வாழ்வதையே விரும்புகின்றனர். நம் உடல் ஆரோக்கியம் என்பது நமது உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றோடு தொடர்புடையது. என்னதான் நாம் சிறந்த உணவு கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டி விட்டால் அந்த நோய் வயதிற்கான நோய் அறிகுறிகள் நமக்கு ஏற்படலாம். இதனைத் தவிர்த்துக் கொள்ள 30 வயதை கடந்த பெண்கள்  கீழ்காணும் பரிசோதனைகளை செய்து கொள்வது நலம்.

நீரிழிவு நோய் பரிசோதனை:

நீரிழிவு நோய் என்பது இன்று பலருக்கும் இருக்கக்கூடிய ஒன்று. மாறிவரும் நம்முடைய வாழ்க்கை முறையின் காரணமாக பெரும்பாலானோருக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருக்கிறது. உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என்றாலும் இந்த நோய்க்கான பரிசோதனையை செய்து கொள்வது நலம். எனவே முப்பது வயதை கடந்து விட்டால் ரத்த குளுக்கோஸ் பரிசோதனை மற்றும் ஹெச்ஏஒன்சி ஆகிய பரிசோதனைகளை செய்து கொள்வது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஒன்றாகும்.

கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை:

30 வயதை கடந்த பெண்களை தாக்கக்கூடிய மற்றொரு நோய் கர்ப்பப்பை புற்று நோயாகும். இந்த நோய் வரும் முன்பே கண்டறிவதற்கு பாப் ஸ்மியர்  பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் கர்ப்பப்பை புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும். முறையற்ற மாதவிலக்கு சுழற்சி இருக்கும் பெண்கள் கட்டாயம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இந்த பரிசோதனையை செய்து கொள்வது இந்த நோய் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள வழிவகுக்கும்.

இதய நோய் பரிசோதனைகள்:

இதய நோய் என்பது இன்று எல்லா வயதினருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. எனவே  30 வயதை கடந்து விட்டால் நம்முடைய ரத்த அழுத்தம்,  ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரால் அளவு ஆகியவற்றை ஒரு வருடங்களுக்கு அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது  நல்லது.

மார்பக புற்றுநோய்:

30 வயதிற்கு மேற்பட்ட பெண்களை தாக்கும்  அபாயகரமான நோய்களில் ஒன்று மார்பக புற்றுநோய். 30 வயதை கடந்து விட்டால் மார்பகப் புற்று நோய்க்கான பரிசோதனையை செய்து கொள்ள தயங்க கூடாது. இதற்கான மேமோகிராபி  பரிசோதனையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செய்து கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Medical tests that must be done by women above 30 years of age


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->